தீயை அணைக்க பெட்ரோலா? தலிபான்களை சமாதானப்படுத்த சர்வதேசத் தீவிரவாதிகளை அனுப்பிய பாகிஸ்தான்… பெரும் பதற்றம்….!!

By Devi Ramu on பங்குனி 11, 2026

Spread the love

பொருளாதார நெருக்கடியிலும், எல்லையில் பதற்றத்திலும் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சர்ச்சைக்குரிய மூன்று பயங்கரவாதிகளைத் தூதுவர்களாகக் காபூலுக்கு அனுப்பியுள்ளது. சர்வதேச அளவில் தேடப்படும் பயங்கரவாதிகளான ஃபஸ்லூர் ரெஹ்மான் கலீல், அப்துல்லா ஷா மஜார் மற்றும் காரி சஜித் உஸ்மான் ஆகியோரை ‘மதத் தலைவர்கள்’ என்ற பெயரில் பாகிஸ்தான் அரசு களமிறக்கியுள்ளது. தங்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி தலிபான்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நிலையில், தலிபான்களின் மொழியிலேயே பேசி அவர்களைச் சமாதானப்படுத்தவே இந்த விபரீத முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது.

 தலிபான்களுடன் போரிடும் அளவுக்கு வலிமை இல்லாததால், பயங்கரவாதிகளை வைத்தே அமைதி பேச முற்படுவது ‘தீயை அணைக்கப் பெட்ரோல் ஊற்றுவதற்குச் சமம்’ என்று சர்வதேச வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர். பயங்கரவாதத்தை ஒழிக்க நிதி பெறும் பாகிஸ்தான், அதே பயங்கரவாதிகளைத் தூதுவர்களாகப் பயன்படுத்துவது அதன் இரட்டை வேடத்தையும், நயவஞ்சகத்தையும் உலகிற்கு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தற்கொலை முயற்சி பாகிஸ்தானுக்கு விபரீதத்தையே தரும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.