ஈரானின் முதுகில் குத்திய பாகிஸ்தான்…. அமெரிக்காவுடன் கைகோர்த்து செய்த பகீர் செயல்… உலக நாடுகளை அதிரவைக்கும் பின்னணி….!

By Nanthini on பங்குனி 7, 2026

Spread the love

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு, அண்டை நாடான பாகிஸ்தான் தனது ராணுவத் தளங்களை வழங்கி மறைமுகமாக உதவி செய்துள்ளது என்ற திடுக்கிடும் தகவல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அண்டை நாடாக இருந்தும், அண்டை நாட்டிற்கான அடிப்படை அறத்தையும், நல்லுறவையும் புறக்கணித்துவிட்டு, பாகிஸ்தான் ஈரானின் முதுகில் குத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்கா ஈரான் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் ராணுவத் தளங்கள் பயன்படுத்தப்பட்டதாக ‘இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியபோதும், பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயல்பட்டு உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

   

தற்போது பாகிஸ்தான் சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, இந்த இக்கட்டான முடிவை எடுக்க அந்த நாட்டைத் தூண்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சில அரபு நாடுகளின் பொருளாதார உதவிகளைப் பெறுவதற்காக, பிராந்திய அமைதியைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், அந்த நாடுகளின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப பாகிஸ்தான் செயல்படத் தொடங்கியுள்ளது சர்வதேச அரசியல் நோக்கர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

   

இந்தச் செயல் பாகிஸ்தான் – ஈரான் இடையிலான தூதரக உறவில் பெரும் விரிசலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுயலாபத்திற்காக ஈரானை காட்டிக் கொடுத்த பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, மத்திய ஆசிய பிராந்தியத்தில் அமைதியைக் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பல மோதல்களுக்கு இது வழிவகுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.