சீனாவில் தனியார் பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கான உணவில் உணவுப் பொருட்களுக்கு பதிலாக பெயிண்ட் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுடைய உணவு பார்ப்பதற்கு வண்ணமயத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சமையல் பணியாளர் ஒருவர் இதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரத்தத்தில் அது கலந்து 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். மொத்தம் 201 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துவதோடு தொடர்ந்து தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இதுபோல நடந்து வந்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவாக வழங்கப்பட்ட கேக் மற்றும் மக்காச்சோளத்தில் செய்யப்பட்ட கார்ன் ரோல் ஆகியவற்றில் அதிக அளவிலான காரீயம் கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இது குறித்த முதல் கட்ட விசாரணையில் பள்ளியில் மாணவர்களுடைய செயற்கை அதிகரிக்கவும் வருவாயை கூட்டமும் இது போன்ற வண்ணமயமான உணவை தயாரிக்க பள்ளி முதல்வர் மற்றும் பள்ளியின் உரிமையாளர்கள் முடிவு செய்தது தெரியவந்துள்ளது.
