BREAKING : “12 வாரங்கள் இனி இல்லை… 365 நாட்கள்”…. 3வது குழந்தைக்கும் 1 ஆண்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பு…. தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

அரசுப் பெண் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மூன்றாவது குழந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக (ஓராண்டு) உயர்த்தி வழங்க சட்டப்பேரவையில் அமைச்சர் சரத்குமார் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அரசுப் பெண் ஊழியர்களின் முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே ஓராண்டு காலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த புதிய சலுகை மூன்றாவது குழந்தைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பெண் ஊழியர்கள் தங்களின் குழந்தைப் பேறு மற்றும் பராமரிப்புக் காலத்தை எவ்வித பணிச் சுமையுமின்றி மன அமைதியுடன் செலவிடவும், தாய்-சேய் நலனை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை பேருதவியாக அமையும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.