சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்.. தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தொழிலாளர் துறை எச்சரிக்கை..!!

By Soundarya on சித்திரை 21, 2026

Spread the love

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாக்கு செலுத்த ஏதுவாகச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்துப் புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவார்கள். தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.