சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1985-ஆம் ஆண்டு படிக்காதவன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ராஜசேகர் இயக்கினார். மேலும் சிவாஜி கணேசன், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். படிக்காதவன் படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் என் தங்கச்சியை நாய் கடிச்சிருச்சுப்பா என்ற வசனத்திற்கு புகழ்பெற்றவர்.
இந்த வசனம் வருமாறு ஒரு காட்சியை படத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என ஜனகராஜ் நினைத்துள்ளார். அதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் கூறியுள்ளார். அதனை ஏற்று என் தங்கச்சியை நாய் கடிச்சிருச்சுப்பா என்ற வசனம் வருமாறு ஒரு காட்சியை ரஜினிகாந்த் எடுக்கச் சொன்னார்.
இயக்குனர் ராஜசேகரும் அது படி காட்சியை எடுத்துவிட்டார். ஆனால் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் போது அந்த காட்சி இல்லை. படத்தின் நீளம் கருதி அந்த காட்சியை நீக்கிவிட்டனர். இதனை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த காட்சி சூப்பர் ஹிட் ஆகும். ஏன் அதனை நீக்கினீர்கள் உடனடியாக அதை படத்தில் இணைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதால் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் இயக்குனர் ராஜசேகர் ஒவ்வொரு ஊராக சென்று தியேட்டர்களில் அந்த காட்சியை இணைத்துள்ளார். ஆனால் ராஜசேகர் எதிர்பார்க்காத அளவிற்கு அந்த சீன் சூப்பர் ஹிட் ஆனது. இந்த தகவலை பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.