ரஜினிகாந்த் பிறந்த நாளான நேற்று தமிழ்நாட்டு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த 1999ம் ஆண்டில் வெளியான படையப்பா படத்தை சொந்தமாக தயாரித்தவர் நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அந்த படம் வசூல் செய்யும் மொத்த பணமும் நடிகர் ரஜினிகாந்தையே போய் சேரும். படையப்பா படம் ரி ரிலீஸ் மூலமாக 10 கோடி ரூபாய்க்கு மேல் ரஜினிக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பணத்தை ரஜினிக்கு தனக்காக வைத்துக் கொள்ளப் போவது இல்லை.
நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை என்ற சேவை அமைப்பை அவர் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த ரஜினிகாந்த் அறக்கட்டளைக்கு தான் படையப்பா ரீ ரிலீஸ் படத்தின் மொத்த வசூலும் போய் சேர உள்ளது. சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் ரஜினிக்கு படையப்பா பங்கு தரும் வாய்ப்புள்ளதால் அந்த பணத்தை கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ஏழை ரசிகர்களுக்கு பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். வறுமையில் வாடும் ரசிகர்களுக்கு அந்த பணத்தில் உதவிகளை செய்யப் போகிறார். குறிப்பாக கல்வி உதவி, மருத்துவ உதவி போன்ற நிதியுதவிகளை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…