தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பலம் வந்து கொண்டிருக்கும் பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது வேட்டுவம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நாயகனாக நடிகர் அட்டகத்தி தினேஷும் வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். முழு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் பகத் பாஸில் மற்றும் அசோக் செல்வநாயகி வரும் நடிப்பதாக கூறப்படுகிறது. நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரேஷியோ ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படியான நிலையில் வேட்டுவம் படப்பிடிப்பில் துணை நடிகர் மணிகண்டன் (60) மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த குண்டம்பாக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் செட்டில் மயங்கி விழுந்த மணிகண்டனை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
