சின்ன வேலை தான்.. ஒரு நாளைக்கு ரூ.6000 சம்பளம்.. நீங்க ரெடியா இருக்கீங்களா..?

By Nanthini on ஆனி 16, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது என்பது மிகவும் சிரமமாக உள்ளது. அப்படி வேலை கிடைத்தாலும் குறைந்த சம்பளத்தில் மொத்த ரத்தத்தையும் உறிஞ்சும் அளவுக்கு வேலை வாங்கி விடுகின்றனர். ஆனால் உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு சிலருக்கு எந்த வேலையும் செய்யாமல் எளிதில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கக்கூடிய வேலை அமைந்து விடுகிறது. அப்படி கிடைப்பது என்பது அரிதான ஒன்றாகத்தான் உள்ளது.

இப்படியான நிலையில் காட்டுவாசி போல வேடமடைந்து ஜாலியாக வனத்தில் நடனம் ஆடிக்கொண்டே சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உங்களால் முடியும் என்றால் இந்த வேலை உங்களுக்கு தான். அதாவது சீனாவின் ஷெனாங்கிஜா தேசிய பாதுகாக்கப்பட்ட வனத்திலே இந்த பணி உள்ளது. இதற்கு நாள் ஒன்றுக்கு 6000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மொத்தம் 16 பணியிடங்கள் இந்த வேலைக்கு உள்ள நிலையில் இதுவரை பத்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.