பரபரப்பு…! திமுக என்னை ஏமாற்றிவிட்டது… அதிமுக பக்கம் சாய்ந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி செல்வகுமார்..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்பட இயக்குநருமான பி.டி. செல்வகுமார், திமுகவில் இருந்து விலகி அதிமுகவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். குமரியில் நேற்று (ஏப்ரல் 8) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவில் இணைந்தபோது தனக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தேர்தல் நேரத்தில் தன்னை அவர்கள் ஏமாற்றிவிட்டதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

திமுகவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த அவர், தனது ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிர்வாகிகள் மற்றும் நலம் விரும்பிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில், இந்தத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் முக்கியப் புள்ளி ஒருவர் அதிமுக பக்கம் சாய்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.