தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக, பாமக போன்ற கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக ஜெயித்து விடலாம் 2026லும் ஆட்சியை மீண்டும் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் அதிமுகவில் பிரிந்து கிடப்பவர்களை ஒன்றிணைக்க சசிகலா ,செங்கோட்டையன் போன்றவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் அந்த முயற்சி கேதுவுக்கும் எடப்பாடி பழனிச்சாமி செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் சதித் திட்டத்திற்கு எடப்பாடி ஆதரவாம். அவரின் இந்த முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது. கண்ணைக் கட்டிக் கொண்டு கிணற்றிலே விழ வேண்டும் என்று பாஜக சொன்னாலும் அதை ஏற்று செயல்படும் சுய சிந்தனை அற்ற மனிதனாக எடப்பாடி பழனிச்சாமி மாறிவிட்டார் என்று கூறியுள்ளார்.
