தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதால் ஸ்டாலினுக்கு அது பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வெளிப்படையாகவே கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதும் இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட இருப்பதாகவும் சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக தங்களை மதிக்கவில்லை என்றும் தங்களுடன் ஒத்துப் போகவில்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இது குறித்த டெல்லி தலைமைக்கு எடுத்துக் கூறி பிரச்சனையை சரி செய்வோம் என்று கூறிய அவர், திமுக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் வாக்குகள் மிக முக்கிய காரணமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…