விஜய் எடுத்த அதிரடி முடிவு… கலகலக்கும் காங்கிரஸ் கோட்டை…. ப.சிதம்பரத்திற்கு தவெக-வில் முக்கிய பதவி…!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தை நியமிப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவின் கூட்டணி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக இந்த வியூகம் வகுக்கப்பட்டாலும், இதற்கு காங்கிரஸ் தரப்பில், குறிப்பாக எம்பி மாணிக்கம் தாகூருக்கு இதில் உடன்பாடில்லை என்று கூறப்படுகிறது.

அதே வேளையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கைப்பற்றுவதற்கான தீவிர முயற்சிகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது, இது வரவிருக்கும் தேர்தல் கூட்டணியில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.