மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் ஏழைத் தொழிலாளி ஒருவர், “பண்பாடு” பேசும் ஒரு சமூக விரோதியால் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் மனதை உலுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த நபர் ஏழைத் தொழிலாளியை இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தியதில், பாதிக்கப்பட்ட நபரின் வாயிலிருந்து இரத்தம் கொட்டத் தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், அந்தத் தொழிலாளியின் மனைவி எதிரே நின்று கைகளைக் கூப்பி அழுதுகொண்டே கெஞ்சியுள்ளார். “ஐயா, என் கணவரை விட்டுவிடுங்கள், எனக்குச் சிறிய குழந்தைகள் இருக்கிறார்கள், எங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதாரமே அவர்தான், உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்” என அவர் கதறியும், அந்தத் தாக்குதல் நடத்திய நபரின் கல் நெஞ்சம் சற்றும் உருகவில்லை. கண்ணெதிரே ஒரு பெண் தன் கணவரின் உயிருக்காகப் போராடிப் பிச்சை கேட்டும், அந்த நபர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
https://twitter.com/sonuydv87/status/2065733381015666707/video/1
திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்க்கக்கூடிய சாதிய ஒடுக்குமுறைகளும், ஏழைகள் மீதான தாக்குதல்களும் நிஜ வாழ்க்கையிலும் தொடர்வதை இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது. தங்களை உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், தலித் மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் மீது நிகழ்த்தும் இத்தகைய அராஜகங்கள் இன்னும் குறையவில்லை என்பதை இந்த வைரல் வீடியோ வெளிச்சம்பாட்டுக் காட்டியுள்ளது. இச்சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…
மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…
மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…