“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

By Swetha on ஆடி 3, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து பெல்ட்டால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் ஓம்கேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் கோராக்பூர் பகுதியில் ஸ்பா ஒன்றை நடத்தி வருகிறார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறே இந்தக் கடத்தலுக்கும் தாக்குதலுக்கும் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஓம்கேஷ்வரை வலுக்கட்டாயமாக ஒரு ஹோட்டல் அறைக்கு கடத்திச் சென்று, கதவை பூட்டிவிட்டு அவரை பெல்ட்டாலும் கைகளாலும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தன்னை விட்டுவிடுமாறு அவர் கெஞ்சிய போதிலும், அங்கிருந்தவர்கள் தொடர்ந்து அவரைத் தாக்கி அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

   

இந்தத் தாக்குதல் வீடியோ வைரலானதை அடுத்து, ஜபல்பூர் போலீசார் உடனடியாகச் செயல்பட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.