குறுக்கே வந்த பைக்…! பெட்ரோல் பங்க் வளாகத்திற்குள் பாய்ந்து கவிழ்ந்த திருமண பேருந்து…. 35-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 28, 2026

Spread the love

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் அருகே உள்ள காக்கூர் பகுதியில் திருமணக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. சாலையில் குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்க் வளாகத்திற்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பெட்ரோல் பங்க் வளாகத்திற்குள் பேருந்து கவிழ்ந்த நிலையிலும், நல்வாய்ப்பாகப் பெரும் தீ விபத்து எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

   

https://twitter.com/BigtvApp/status/2092934694497358304/video/1