“இப்படி பண்ணிட்டானே…!” பட்டப்பகலில் இளம்பெண்ணை குத்தி கொன்ற கொடூரன்…. அவன் மேல தான் சந்தேகம்…. குடும்பத்தினரின் பரபரப்பு புகார்…!!

By Devi Ramu on ஆவணி 28, 2026

Spread the love

டெல்லியின் திலக் நகர் பகுதியில் உள்ள நியூ மகாவீர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த முஸ்கான் (21) என்ற இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே புகுந்த நபர் அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். கல்லூரி மாணவியான முஸ்கான், பகுதிநேரமாக மாடலிங் துறையிலும் பணியாற்றி வந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இக்கொலை சம்பவத்தில் ஜிம் பயிற்றுநர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி பொலிஸார், தப்பியோடிய சந்தேக நபரைப் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.