UPSC மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 12 அன்று தொடங்கி அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது. இருப்பினும், லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வரும் பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க அக்டோபர் 9 வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வின் மூலம் ஸ்பெஷலிஸ்ட் கிரேடு 3 உதவிப் பேராசிரியர் , உதவி அரசு வழக்கறிஞர், உதவி ஆசிரியர், ஸ்பெஷலிஸ்ட் கிரேடு 2 ஜூனியர் ஸ்கேல் மயக்கவியல் மற்றும் குழந்தை மருத்துவம் மற்றும் லடாக் சட்டம் மற்றும் நீதித் துறைக்கான சட்ட அதிகாரி உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் ஊதிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் இணையதளத்தில் உள்ள பொதுவான அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் பிறந்த தேதி, சமூகப் பிரிவு மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களை யுனிவர்சல் பதிவு எண், பொது விண்ணப்பப் படிவம் ஆகியவற்றோடு சரியாக இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் அல்லது தகவல்களைச் சரியாக வழங்கத் தவறினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனக் எச்சரிக்கப்பட்டுள்ளது.
