“மனைவி, 3 பிள்ளைகள் தவிப்பு…” திருநங்கை மீது காதல்… இன்ஸ்டாவில் ரொமான்ஸ் ரீல்ஸ் போட்டு அட்டகாசம்…. அழுது புலம்பும் மனைவி… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 11, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் இஸ்திகார் பேக். திருமணமான இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இஸ்திகார் பேக்கிற்கு அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவருடன் திடீரெனக் காதல் மலர்ந்துள்ளது.

காதல் போதை தலைக்கேறியதால், பெற்ற குழந்தைகள் மற்றும் மனைவியைப் பற்றிப் சிறிதும் கவலைப்படாமல், குடும்பத்தைக் நட்டாற்றில் விட்டுவிட்டு அந்தத் திருநங்கையுடன் இஸ்திகார் பேக் ஓட்டம் பிடித்துள்ளார். ஓடிப்போனது மட்டுமின்றி, அந்தத் திருநங்கையுடன் நெருக்கமாக இருந்து ரொமான்டிக் பாடல்களுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வந்துள்ளார்.

   

இங்கே வீட்டில் உணவுக்கு வழியின்றி, பிஞ்சுக் குழந்தைகளுடன் மனைவியும் காவல் நிலைய வாசலில் நீதி கேட்டு அழுது புலம்பி வருகின்றனர். “3 பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்க்கையையும் மனைவியின் வாழ்க்கையையும் சீரழித்துவிட்டு ரீல்ஸ் போடும் இந்த நபரை உடனடியாகக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என இணையத்தில் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.