தமிழகத்தில் 4000 காலி பணியிடங்கள்.. வெளியான சூப்பர் அறிவிப்பு.. ரெடியா இருங்க…!

By Nanthini on ஆடி 11, 2025

Spread the love

தமிழகத்தில் அந்தந்த மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் 2500 செவிலியர்கள், 1500 மருந்தாளுனர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்களை நியமிக்க தேசிய நலவாழ்வு குடும்பம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதனை MRB நிரப்பி வந்த நிலையில் இந்த முறை அது மாற்றப்பட்டுள்ளது. மேலும் இப்படியானது தற்காலிகமானது எனவும் 11 மாத கால ஒப்பந்தத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் விரைவில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.