FLASH NEWS: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்…. மாலை 6.30 மணிக்குள் கடைகளை மூட உத்தரவு… மீண்டும் தடியடி…..?

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

டெல்லியின் முக்கிய வணிக மையமான கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் அலுவலகங்களை மாலை 6.30 மணிக்குள் மூட வேண்டும் என்று டெல்லி நகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருகிலுள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், இந்தத் திடீர் கெடு விதிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்று அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதனைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனநாயக வழியில் போராடும் குரல்களை ஒடுக்கும் நோக்கில், ஜந்தர் மந்தரில் மோடி அரசு மீண்டும் ஒருமுறை தன் சொந்த குழந்தைகள் மீதே கொடூரமான தாக்குதலை நடத்தத் திட்டமிடுகிறதா எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.