தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் “எலும்பை உடைப்பேன்” என பகிரங்கமாகப் பேசிய விவகாரத்தில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இன்று காலை அவரை அதிரடியாகக் கைது செய்த காவல் துறையினர், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
