“பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்”…. CJP-யின் அதிரடி பதிவு…. X- தளத்தை அலற வைக்கும் ‘#PMMODIRESIGN’ ஹேஷ்டேக்…. பரபரப்பு…!

By Nanthini on ஆடி 21, 2026

Spread the love

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CJP) நடத்திய போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு ஆகியவை தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வன்முறைச் சம்பவத்திற்கு எதிராக சி.ஜே.பி-யின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வெளியிட்ட பதிவு, சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் ‘#PMMODIRESIGN’ என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்ட் செய்து, மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்த நீட் விவகாரமும், போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையும் இப்போது மோடி அரசின் நிர்வாகத் திறனுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் புயலாக உருவெடுத்துள்ளது.