இது ரொம்ப தப்பு… “பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” விஜய்க்கு வந்த புதிய சிக்கல்..!!

By Soundarya on சித்திரை 28, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குழந்தைகளை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதாகக் கூறி, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் (TNCRW) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரச்சாரத்தின்போது குழந்தைகளிடம், “பெற்றோரிடம் அடம் பிடித்து உங்கள் விஜய் மாமாவுக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று அவர் பேசியது, குழந்தைகளின் உரிமைகளை மீறும் செயல் என்றும், அவர்களுக்கு உளவியல் ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, விஜய் தனது செயலுக்குப் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், குழந்தைகளை வைத்து அரசியல் வீடியோக்கள் உருவாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும், மாநிலக் குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையத்திடமும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.