“சூர்யவன்ஷி உடலில் ரகசிய AI சிப்.?” மனுஷன் பந்து அடிக்கிற மாதிரி தெரியல… அவரை உடனே சோதனை பண்ணுங்க.. பாகிஸ்தான் நிபுணர் நௌமான் நியாஸ் பகீர்..!!

By Soundarya on சித்திரை 28, 2026

Spread the love

சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டத்தைப் பாராட்டிய நௌமான் நியாஸ், அந்தச் சிறுவன் பந்துகளை அடிக்கும் விதம் ஒரு சாதாரண மனிதன் அடிப்பது போலத் தெரியவில்லை என்று வியந்து கூறியுள்ளார். இதனை ஒரு “நம்பமுடியாத அதிசயம்” என்று குறிப்பிட்ட அவர், அந்தப் பையன் உடம்பிற்குள் ஏதேனும் AI சிப் (செயற்கை நுண்ணறிவு சிப்) பொருத்தப்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும் என்று வேடிக்கையாகக் கூறியுள்ளார்.

மேலும், வழக்கமாக வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை செய்யப்படுவது போல, சூர்யவன்ஷியையும் ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பி அவரது திறமையின் ரகசியத்தை ஆராய வேண்டும் என்று அவர் நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.. இது அடிப்படையில் சூர்யவன்ஷியின் அசுரத்தனமான பேட்டிங் திறமையை மெச்சும் விதமாகவே சொல்லப்பட்டுள்ளது.