“அரை கிலோமீட்டர் தூரம் கட்டிலில் பயணம்….” ஆக்ராவில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோதனை… அடிப்பை வசதி இன்றி தவிக்கும் மக்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஃபேதேஹாபாத் அருகே அமைந்துள்ள ராம்தாஸ் கி தார் சாச்சிபுரா கந்தேர் கிராமத்தில் அடிப்படை சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவ வலியால் அவதியுற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரீனா என்ற அப்பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மழைக்காலத்தில் கிராமத்திற்குச் செல்லும் பாதைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி வெள்ளம் போல் தேங்குவதால், ஆம்புலன்ஸ் வாகனத்தால் கிராமத்திற்குள் வர முடியவில்லை. இதனால், கிராமத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வரை அப்பெண்ணைக் கட்டிலில் சுமந்து சென்றனர்.

   

கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இதே கிராமத்தைச் சேர்ந்த சயாராம் என்பவர் சரியான சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்குக் தாமதமாகக் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 2026-லும் கிராமங்களுக்குச் சரியான சாலை வசதி இல்லாததும், அவசர காலங்களில் மக்கள் படும் அவதியும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.