ஐயோ கடவுளே… 2 முறை விசா ரிஜெக்ட்… சிதைந்த வெளிநாட்டு கனவு… 25 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 5, 2026

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பூவச்சல் பகுதியைச் சேர்ந்த பாபு-சிந்து தம்பதியின் 25 வயது மகள் அஞ்சனா, பிசிஷியன் அசிஸ்டென்ட் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பியுள்ளார். இதற்காக அவர் இங்கிலாந்துக்குச் செல்ல மாணவர் விசா கோரி முதன்முறையாக விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் இரண்டாவது முறையாகவும் விண்ணப்பித்துள்ளார். இரண்டாவது முறையாகவும் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், வெளிநாடு சென்று படிக்க முடியவில்லையே என்ற தீவிர மனவேதனையிலும் விரக்தியிலும் அவர் இருந்துள்ளார்.

   

இதன் காரணமாக அஞ்சனா விபரீத முடிவெடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் உயிரிழந்ததற்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.