உஷார் மக்களே..! தமிழகத்தில் கனமழை வெளுக்கப்போகுது… இந்த 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…!!

By Soundarya on ஐப்பசி 16, 2025

Spread the love

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியிலே தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதன் காரணமாக  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூா், ஈரோடு, கோவை, நீலகிாி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.