தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வர மறுபக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் நடத்தி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு இந்த தேர்தலில் அதனை எதிர்க்கட்சியாக கூட வரவிடாது என்ற கருத்து தான் தற்போது நிலவுகிறது. அதிமுகவிலிருந்து இபிஎஸ் மூலம் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் சசிகலா ஆகியோர் நால்வர் அணியாக உருவெடுத்து உள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவை ஒருங்கிணைத்தே தீருவோம் என்று தேவர் குருபூஜை என்ற டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் சபதம் ஏற்றனர். ஆனால் சபதம் எடுத்து 25 நாட்களிலேயே புதிய கட்சியை தொடங்குவேன் என்று ஓபிஎஸ் கூறுகிறார். மறுபக்கம் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க தொடங்கினால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…
பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…
மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…
புது தில்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளியான (Content Creator) இந்தா என்ற பெண் பயணிக்கு ஏற்பட்ட…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தாம் முன்மொழிந்ததாக…
சமூக வலைதளங்களில் ஒரு பள்ளிச் சிறுமி தனது ஆசிரியையிடம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை…