தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தச் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆ.வீ. இரஞ்சித் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிரடியாக விலகியுள்ளனர். இந்தத் திடீர் முடிவு ஓபிஎஸ் அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நிர்வாகிகளின் இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாக, கூட்டணி முடிவுகளை எடுப்பதில் தலைமை காட்டி வரும் தாமதமே சுட்டிக்காட்டப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராதது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கம் அளித்த மாவட்டச் செயலாளர் ரஞ்சித் குமார், ஓபிஎஸ் மீது தனிப்பட்ட முறையில் எந்தக் கசப்பும் இல்லை என்றும், ஆனால் தேர்தல் களத்தில் செயல்பட வேண்டிய இக்கட்டான நேரத்தில் தலைமை மௌனம் காப்பது தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் 19-ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், தாங்கள் காஞ்சிபுரத்தில் உள்ள தங்களது பலமான கட்டமைப்போடு அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூண்டோடு விலகல் படலம், ஓபிஎஸ் அணியின் எதிர்காலக் கேள்விக்குறியாக்கியுள்ளது. விலகிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலையில், ஒரு மாவட்டமே விலகியிருப்பது தென் மாவட்டங்களைத் தாண்டி மற்ற பகுதிகளில் ஓபிஎஸ் அணியின் பிடி தளர்வதையே காட்டுகிறது. வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களிலும் இதே போன்ற மாற்றங்கள் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…