ஓபிஎஸ் சொன்ன ஒரே வார்த்தை… EPS தலையில் விழுந்த இடி… அதிமுகவில் ஏற்படும் மாற்றம்..!!

By Soundarya on ஐப்பசி 28, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் கலந்து கொண்ட ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல் ஸ்டாலின் சொல்கிறாரே என்று நிருபர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் அளித்த அவர், “இன்றைய சூழலில் எல்லா கட்சிகளும் பிரிந்து கிடக்கிறது. அதிமுக பிரிந்து கிடக்கிறது, பாமக பிரிந்து கிடக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் அவர்களுக்கு தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இது கண்கூடாக தெரிகிறது. திமுகவுக்கு ஏன் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல வேண்டும் இல்லையா? எல்லாம் எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடக்கிறது. இதனால் திமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று பொதுமக்கள் பேசுகிறார்கள். நான் பேசவில்லை. என் மீது பழி போடாதீர்கள். அதிமுக குறித்த கேள்விக்கு, ஒரு நல்ல முடிவை தமிழக மக்கள் நலன் கருதி எடுக்க இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கிறது .எனவே எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.