உடல் நலத்தை பேணி காக்க உடற்பயிற்சி அவசியம். ஆனால் உடற்பயிற்சி செய்து முடித்த உடனே சிலர் தண்ணீர் குடிக்கின்றனர். ஆனால் அது நன்மை பயக்காது. இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அத்தியாவசிய எலெக்ட்ரோலைட்டுகள் குறையும். தண்ணீரை உடனே குடிப்பது செரிமானத்தை சீர்குலைத்து முக்கிய தாதுக்களை நீர்த்துப்போக செய்யும். இதனால் சில நேரம் தலை சுற்றல் ஏற்படலாம். சரியான நேரத்தை தெரிந்து கொண்டு படிப்படியாக தண்ணீர் குடிக்கலாம்.
உடற்பயிற்சி செய்யும் போது தசைகளுக்கு ரத்த ஓட்டம் முக்கியம் அதிக அளவு தண்ணீர் குடித்தால் ஊட்டச்சத்து உறிஞ்சதலை தாமதப்படுத்தி நன்மைகளை குறைக்கும் உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் தேவையான போது சிறிது சிறிதாக தண்ணீர் குடிப்பது நல்லது. கடின உடற்பயிற்சிக்கு பிறகு வேகமாக தண்ணீர் குடித்தால் குமட்டல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே உடற்பயிற்சிக்கு பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் காத்திருந்து மெதுவாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
