பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்த நிலையில் அவரை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் ஓபிஎஸ்க்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது. மேலும் அதிமுக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க வாய்ப்பு இருந்தாலும் ஓபிஎஸ்சை சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் பாஜகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையில், விஜய்யின் தவெகவுடன் அவர் கூட்டணி வைக்க பண்ருட்டி ராமச்சந்திரன் அட்வைஸ் கொடுத்தார். இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இதனால் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசியது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஸ்டாலின் உடல்நிலை தேறி, வீடு திரும்பி உள்ள நிலையில் இன்று காலையில் வழக்கம்போல வாக்கிங் சென்றபோது, அவரை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த் சந்தித்ததை தொடர்ந்து, தற்போது ஓபிஎஸ் சந்தித்த போட்டோ வெளியாகியுள்ளது. இதற்கு பின் அரசியல் உள்ளதா? அல்லது எதார்த்தமான சந்திப்பா? என்று கேள்வி எழும்பியுள்ளது.
