கர்நாடகா மாநிலத்தில் மருத்துவத்துறையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. பொதுவாக O பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உள்ளிட்ட ரத்த வகைகளை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கர்நாடகாவில் ஒரு பெண்ணிற்கு புதிதாக ஒரு வகை ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ரத்தம் ORH பாசிட்டிவ் வகையை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக அவருடைய ரத்தத்தில் சிவப்பு அணுக்களும் வினை புரியும் நிலையில் இருந்தது. பொதுவாக சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருக்காது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து டாக்டர்கள் அந்தப் பெண்ணின் ரத்தம் மாதிரி சேகரித்து அதிநவீன பரிசோதனை மையத்திற்கு அனுப்பியுள்ளார்கள். அங்கு பரிசோதனை செய்ததில் அவருடைய ரத்தம் பான்ரியாக்ட் அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் வினைபுரியும் நிலையில் உள்ளது. இதனையடுத்து அவருடைய ரத்த மாதிரி இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்திற்கு அனுப்பி உள்ளார்கள். அங்கு 10 மாதம் நடந்த சோதனையில் அந்த பெண்ணிற்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு “கோமர் இந்திய பெங்களூர்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
