கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறை… அதிமுகவிலிருந்து நானாக விலகவில்லை… ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி..!

By Soundarya on சித்திரை 13, 2026

Spread the love

அதிமுகவிலிருந்து தான் தானாக முன்வந்து விலகவில்லை என்றும், மிகவும் அநியாயமான முறையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். தன்னை ஒருமையில் பேசியும், கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாகக் கட்சியிலிருந்து நீக்கியும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அநீதி இழைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் செயல் தொண்டர்களுக்கும், தனக்கும் இழைக்கப்பட்ட துரோகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நடைபெறவுள்ள தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமியின் இந்தச் செயலுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும், அவர்கள் வழங்கும் தீர்ப்பே இறுதியானது என்றும் ஓ.பி.எஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தான் எப்போதும் தவறான பாதையில் செல்லமாட்டேன் என்பது தனது தொகுதி மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும், உண்மையான அதிமுக தொண்டர்கள் தன் பக்கமே இருப்பதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.