அங்க போனதே தப்பா போயிருச்சே…. “ஸ்டாலின் கொடுத்த அல்வா”…. திமுகவிலும் பதவி கிடைக்காமல் தவிக்கும் ஓபிஎஸ்….!

By Nanthini on ஆவணி 23, 2026

Spread the love

திமுகவில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வயது நிர்ணய அறிவிப்பால், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஏமாற்றமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 75 வயதைக் கடந்துவிட்ட காரணத்தால், திமுகவில் மாவட்டச் செயலாளர் முதல் அடிப்படை கிளைச் செயலாளர் வரையிலான எந்தவொரு அதிகாரமிக்க நிர்வாகப் பதவியையும் அவர் வகிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இருப்பினும், அவரது அரசியல் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவருக்குக் கட்சியின் தலைமை கழக நிர்வாகி போன்ற கௌரவப் பொறுப்பை வழங்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டாலும், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட முக்கிய பதவிகள் எதுவும் அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றே விவரமறிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.