தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணையவுள்ளதாக அண்மையில் தகவல்கள் பரவி வந்த நிலையில், தேனியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் பேசிய பேச்சு அந்த வதந்திகளுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பேசிய ஓபிஎஸ், “விஜய்யைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது.
அதில் ஒண்ணுமே தெரியாதது போல் இருக்கும் செந்திலிடம் கவுண்டமணி பேசுவதைப் போலத் தான், அரசியல் அனுபவமற்ற விஜய் இருக்கிறார்” என வேடிக்கையாகச் சாடினார். தவெகவில் ஓபிஎஸ் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், விஜய்யை இந்த அளவுக்குக் கடுமையாகக் விமர்சித்திருப்பதன் மூலம், அவர் கட்சி மாறப்போவதில்லை என்பதும் தவெகவுடனான கூட்டணி வாய்ப்புகளுக்குக்கூட முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்பதும் அரசியல் வட்டாரத்தில் தெளிவாகியுள்ளது.
