ரேஷன் கார்டு கூட தேவையில்லை…. வெறும் ரூ.20 இருந்தால் போதும்… TN அரசின் மாஸ் ஆடி ஆஃபர்….. உடனே கிளம்புங்க….!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு இணங்க, தமிழக அரசு விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் அதிரடி ஆடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையின் நகலை அந்தந்த வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, வெறும் ரூ.20 கட்டணத்தில் 8 வகையான காய்கறி விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் உடலுக்கு ஊட்டம் அளிக்கும் தக்காளி, வெண்டை, கொத்தவரை, பூசணி, புடலை, பீர்க்கன் உள்ளிட்ட உயர்தர விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் இல்லங்களிலேயே இயற்கை முறையில் காய்கறிகளைப் பயிரிட்டுப் பயனடையலாம்.