அடுத்த பரபரப்பு..! மீண்டும் அதிமுகவில்..? முடிவை அறிவித்த ஒபிஎஸ்… கிரீன் சிக்னல் கொடுப்பாரா EPS..?

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love
அதிமுக பிளவுபட்டு இருப்பதைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர் அனைவரும் கட்சி ஒன்றிணைய வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  போடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்த முடிவை பொதுக்குழு நடத்துபவர்கள்தான் எடுக்க வேண்டும் என்றும், தனது தரப்பில் இருந்து எந்தத் தடையும் இல்லை என்றும் மறைமுகமாகக் கூறியுள்ளார்.  இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி  தலைமையில் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பான எந்த அறிவிப்புகளும் அல்லது தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.
மாறாக, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை “துரோகிகள்” என்று அழைக்கும் இபிஎஸ், அவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதை உறுதியாக நிராகரித்துள்ளார். அண்மையில், ஓபிஎஸ் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு, புதிய கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதாகவும், அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் சூடுபிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில், கட்சியில் யார் சேரலாம், யாரை சேர்க்கக்கூடாது என்ற இறுதி முடிவை இபிஎஸ் மட்டுமே எடுப்பார் என்று அதிமுக தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.