நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் உரைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில பெண் எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று “தேவையற்ற செயல்களில்” (unexpected activity) ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தமக்குத் தகுந்த ஆதாரங்களுடன் கூடியத் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.
இத்தகைய அசம்பாவிதங்கள் ஜனநாயக மாண்பைச் சீர்குலைக்கும் என்பதால், தற்காப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா தெரிவித்தார். நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்ற இருந்தபோது, எதிர்க்கட்சிப் பெண் எம்பிக்கள் பிரதமரின் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் அன்றைய தினம் பிரதமரின் உரை ரத்து செய்யப்பட்டது. பெண் எம்பிக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி பிரதமரைத் தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…