பகீர்..! பிரதமரை தாக்க எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி…? “அவைக்கு வர வேண்டாம் என நானே தடுத்தேன்” சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்புதகவல் …!!

By Soundarya on மாசி 5, 2026

Spread the love

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் உரைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில பெண் எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று “தேவையற்ற செயல்களில்” (unexpected activity) ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தமக்குத் தகுந்த ஆதாரங்களுடன் கூடியத் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

இத்தகைய அசம்பாவிதங்கள் ஜனநாயக மாண்பைச் சீர்குலைக்கும் என்பதால், தற்காப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா தெரிவித்தார். நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்ற இருந்தபோது, எதிர்க்கட்சிப் பெண் எம்பிக்கள் பிரதமரின் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் அன்றைய தினம் பிரதமரின் உரை ரத்து செய்யப்பட்டது. பெண் எம்பிக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி பிரதமரைத் தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.