திடீர் திருப்பம்… 2026ல் தவெக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகள்… வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது 2026 சட்டமன்றத் தேர்தல் பல திருப்பங்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகை என்பது பலரையும் கதி கலங்க வைத்துள்ளது. விஜய்க்கு கட்சி ஆரம்பித்தது முதலே மக்கள் மத்தியில் ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது. விஜய்க்கும் அவருடைய ரசிகர்களுக்கும் அரசியல் அனுபவம் இல்லை என்று விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டாலும் இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து விஜய்க்கு பலத்தை கூட்டினார்.

இதனை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தமிழக வெற்றி கழகம் தீவிரம் காட்டி வருகின்றது. இந்நிலையில் விஜயின் தமிழக வெற்றிக்கழக 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் குறைந்தபட்சம் எட்டு சதவீதம் வாக்குகள் பெறும் என்று அரசியல் விமர்சகர் வம்சி சந்திரன், கனித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு அடுத்த இரண்டு மாதங்களில் தமிழக வெற்றி கழகம், டிடிவி தினகரன், பாமகவின் ஒரு பிரிவு அதாவது அன்புமணி அல்லது ராமதாசுடன் கூட்டணி அமைத்தால், செங்கோட்டையன் மேலும் சில அதிமுக அதிருப்தி தலைவர்களை விஜய் கட்சியில் இணைத்தால், விஜய் உறுதியான பிரச்சாரத்தை மேற்கொண்டால் தமிழக வெற்றிக்கழக கூட்டணி நிச்சயம் 20 சதவீதத்தை தாண்டி வாக்குகள் பெறும் என்று தெரிவித்துள்ளார்.