தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத ஒரு பெரும் அரசியல் புயல் தற்போது வீசத் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், தனது அரசியல் நகர்வுகளை மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். முதற்கட்டமாக, திமுகவின் அச்சாணியாக விளங்கிய காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் போன்ற தோழமைக் கட்சிகளைத் தன்வசப்படுத்தி, ‘மெகா கூட்டணி’ என்ற பிம்பத்தை உடைத்தெறிந்த விஜய், தற்போது அதைவிட ஆபத்தான ‘இரண்டாம் கட்ட நகர்வை’ (Phase-2) நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார். இந்த அதிரடி நகர்வு அறிவாலய வட்டாரங்களை அச்சத்துடனும் நடுக்கத்துடனும் உற்றுநோக்க வைத்துள்ளது.
தவெக தலைவையின் தற்போதைய முக்கிய டார்கெட், திமுகவின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் தான் என்பதுதான் தற்போதைய அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தள்ளப்பட்டுள்ள திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் நிலவும் சோர்வையும் அதிருப்தியையும் தவெக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது. திமுக என்ற பிரம்மாண்ட கோட்டையை வெளியிலிருந்து தாக்குவதை விட, அதன் முக்கிய தூண்களாக இருக்கும் சீனியர் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் கோட்டையின் செங்கற்களை ஒவ்வொன்றாக உருவ விஜய் வியூகம் வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் தங்களுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் இருக்கும் சில முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் தவெக தரப்பு ஏற்கனவே ரகசியப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. தவெக இப்போது ஒரு கூட்டணி ஆட்சியை நடத்தத் தொடங்கியுள்ளதால், திமுகவிலிருந்து விலகி வரும் சீனியர்களுக்குத் தகுந்த முக்கியத்துவமும், எதிர்காலத்தில் பெரிய பதவிகளும் வழங்கப்படும் என்ற ‘அதிகாரப் பகிர்வு’ உத்தரவாதம் தரப்படுவதாகக் கூறப்படுகிறது. மாவட்ட அளவில் செல்வாக்கு மிக்க திமுக தலைவர்கள் தவெக-விற்கு மாறினால், அவர்களோடு சேர்ந்து லட்சக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களும் தவெக நோக்கி நகர்வார்கள் என்பதால், இது திமுகவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு மாஸ்டர் பிளானாகப் பார்க்கப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகள் கையை விட்டுப் போன சோகம் மாறுவதற்குள், சொந்தக் கட்சியின் தலைவர்களுக்கே விஜய் வலை வீசுவதை அறிந்து திமுக தலைமை கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு, கட்சியை விட்டு யாரும் நகராத வண்ணம் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை நேரில் அழைத்து சமாதானப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஆட்சியில் இருக்கும் தவெக-வின் பலமும், முதலமைச்சர் விஜய்யின் வேகமும் திமுகவின் சீனியர்களை யோசிக்க வைத்துள்ள சூழலில், இந்த ‘ஆபரேஷன் பேஸ் 2’ நகர்வு மட்டும் நினைத்தது போல் நடந்தால் தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களுக்குத் பரபரப்பு பஞ்சமிருக்காது என்பதில் சந்தேகமில்லை.
அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…
போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்,…
விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…
சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…