லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தான் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரஜினியுடன் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் டிக்கெட் புக்கிங் கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி தொடங்கிய நிலையில் சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் படத்தின் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டன. அடுத்த மூன்று நாட்களுக்கு திரையரங்குகளில் டிக்கெட்டுகள் ஹவுஸ் புல் ஆகியுள்ளது.
இதனிடையே உலகம் முழுவதும் கூலி திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியானது. தமிழ்நாட்டில் முதல் நாள் முதல் காட்சியைக் காலை 9 மணிக்கு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முதல் காட்சியை காலை 6:00 மணிக்கும் திரையிடப்பட்டது. கூலி திரைப்படம் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த வாரம் சுதந்திர தின விடுமுறையுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் கூலி படத்திற்கு வசூல் அதிக அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரசிகர்கள் முன்பதிவு செய்து வைத்துள்ள நிலையில் இந்த வாரம் இறுதிவரை ஹவுஸ்புல் காட்சிகளாக கூலி திரைப்படம் ஓடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்நிலையில் வெளிநாட்டு ரிலீசில் கூலி படம் ஆல் டைம் ரெகார்ட் செய்துள்ளது. வட அமெரிக்காவில் மட்டும் கூலி படம் பிரீமியரில் $3.04 மில்லியன் வசூலித்து இருக்கிறதாம். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 26.67 கோடி ஆகும். இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகபட்சம் என வினியோகஸ்தரே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…