பெங்களூரு சந்திரா லேஅவுட் பகுதியில் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணை வீட்டிற்கு அழைத்த நபரிடம், ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்தபோது, அவர்களின் நண்பரான அந்த நபர் டேட்டிங் ஆப் மூலமாக ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்துள்ளார். முகமூடி அணிந்து வந்த அந்தப் பெண், அறைக்குள் வந்ததும் முகமூடியைக் கழற்றியபோது அவர் ஒரு திருநங்கை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அவரை வெளியே செல்லும்படி கூறியுள்ளார்.
இதற்கிடையே, சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு திருநங்கையும் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து கத்தியைக் காட்டி அந்த நபரை மிரட்டியதோடு, படுக்கையறை கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 226 கிராம் எடையுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் வெளியூர் சென்றிருந்த வீட்டின் உரிமையாளர் திரும்பி வந்து பார்த்தபோது திருட்டு சம்பவம் குறித்து அறிந்து, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, இச்சம்பவத்தில் தொடர்புடைய நசியா மற்றும் சையத் மௌஷின் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். ஆன்லைன் செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபர்களை நம்பி வீட்டிற்கு அழைக்கும்போது ஏற்படும் பேராபத்துகளையும், பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது. தொடர்ந்து இவ்வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…
பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…