குஜராத் மாநில அகமதாபாத்தை சேர்ந்த கேஷவ் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவருடைய மனைவியை உணவில் பூண்டு மட்டும் வெங்காயம் பயன்படுத்தாமல் சமையல் செய்துள்ளார். இது கேஷவ் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த சண்டை ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில் ஒரே வீட்டில் இரண்டு வகையான சமையல் செய்யப்பட்டது.
அப்படியும் பிரச்சனை தீர்வுக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து கேஷவ் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 2013 ஆம் ஆண்டு கேசவ் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சமையலில் வெங்காயம் பூண்டு போடாமல் உணவு தயாரிப்பதாகவும், வீட்டில் இருந்து சென்று விட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அடிக்கடி மத பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் பிறகு குஜராத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த போது இருவருக்கும் விவாகரத்து வழங்கிய நீதிமன்ற உத்தரவிட்டது.
