தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 10 முதல் அரையாண்டு தேர்வு தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 10 இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்க உள்ளன. 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு இன்று தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனைப் போலவே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் தேர்வுகள் தொடங்க உள்ளன.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுகள் நிறைவடைகிறது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை மொத்தம் 12 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை தொடர்ந்து பத்தே நாட்களில் பொங்கல் பண்டிகையும் வருவதால் அதற்கு ஐந்து நாட்கள் கூடுதல் விடுமுறையாகும். தொடர்ந்து விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளன.
