2 மாதங்களுக்கு முன்பு கடித்த நாய்….! மார்கெட் சென்றவருக்கு நடந்த சோகம்…. பரிதவிக்கும் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on புரட்டாதி 15, 2025

Spread the love

சென்னை மாவட்டம் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது. இவர் கடந்த ஜூலை மாதம் மீரா சாஹிப் மார்க்கெட் பகுதியில் வைத்து ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது முகமதுவின் முழங்காலில் ஒரு தெரு நாய் ஒன்று கடித்து குதறியது. இதனால் காயமடைந்த முகமது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 12ஆம் தேதி முகமது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அந்த சோதனையில் முகமது ரேபிஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. அவரை தனி அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.