பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த பிண்டு என்பவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த குஷ்பு குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணை அவர் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் வரதட்சணை பெற்று வரும்படி தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குஷ்பூ கணவரை பிரிந்து தன்னுடைய பெற்றோர்களுடன் தனியாக வசித்து வருகின்றார். பிறகு குஷ்புவிடம் முறையாக விவாகரத்து பெறாமல் பக்கத்து ஊரை சேர்ந்த குடியா குமாரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் அவரிடமும் தினமும் சண்டை போட்டு அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் அவரிடமும் தினமும் சண்டை போட்டு பிண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் முதல் மனைவியைப் போல இவரிடமும் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு அடித்து துரத்தியுள்ளார். அதன் பிறகு தற்போது மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார். இதனை அறிந்த முதல் இரண்டு மனைவிகளும் இதனை அறிந்த முதல் இரண்டு மனைவிகளும் சேர்ந்து சேர்ந்து கணவன் மீது பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை மற்றும் திருமண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் விவாகரத்து செய்யாமல் மூன்று திருமணங்களை செய்து கொண்டதை ஒப்பு கொண்டார். ஆனால் தன் மீது சாட்டப்பட்டுள்ள வரதட்சனை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமையாக குற்றங்களை அவர் மறுத்துள்ளார். மேலும் பிண்டு தரப்பில் முதல் மற்றும் இரண்டாவது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் “கணவனான தன்னையும் தனது 61 வயதுடைய தாயையும் உணவு கொடுக்காமல் இருவரும் கொடுமை படுத்தினார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுக்கும் குஷ்பு மற்றும் குடியா பிண்டும் அவரது தாயும் பெண்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். ஒருவர் 3 பெண்களை அடுத்தடுத்த வருடங்களில் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியது அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
