திடீர் திருப்பம்… விஜய்யின் தவெகவில் இணையும் NDA கூட்டணி கட்சிகள்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் திமுகவுக்கு பெரிய சவாலாக விஜய் மாறி உள்ளார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இணைந்த பிறகு நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. செங்கோட்டையன் கட்சியில் இணைந்த கையோடு மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான ஒரு பட்டியல் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு கசிய விடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷா மற்றும் பியூஸ் கோயல் ஆலோசனையின் படி வெளியான இந்த தகவல் கூட்டணி குழு தலைவலியை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக, பாமக, ஓபிஎஸ் மற்றும் அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றி கழகம் பக்கம் சாய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.